மூன்று வயது குழந்தைக்கு 35 வயது என்று குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்பது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. இந்த வாக்காளர் அடையாள அட்டைகளில் சில சமயங்களில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதுண்டு.
அந்த வகையில், மூன்று வயது குழந்தைக்கு 35 வயது என்று குறிப்பிட்டு தெலுங்கானா மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தை அங்குள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வருகிறார். அவருக்கு தற்போது வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டையில் குழந்தையின் புகைப்படம் எப்படி வந்தது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.