விஜயகாந்த் பிறந்தநாள் விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் – வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி இன்று (24.08.2017) சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் நலிவுற்ற ஏழை எளிய 100 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் வைப்பு நிதியாக வழங்கியுள்ளேன். தர்மபுரி மாவட்டத்திற்கு 100 ஊராட்சிகள், 2000 கிராமங்கள், வருடம் 10,000 ஏக்கர், ஏர்உழுது 3000 விவசாயிகள் பயன்படுகின்ற வகையில், இலவசமாக நவீன விஞ்ஞான முறையில் ஏர்உழவும், விதை விதைப்பும்
பயன்படுகின்ற வகையில் 6 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பு (TRACKTER) டிராக்டர் வழங்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திரனாளிக்கு 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர (TVS SCOOTY) வழங்கப்பட்டது. மறைந்த கழக நிர்வாகிகள் குடும்பங்களுக்கு 5 லட்சத்து நிதியுதவி வழங்கப்பட்டது, பெரம்பலூர் மாவட்டத்திற்கு வேப்பூர் ஒன்றியம் S.ராஜவேல் அவர்களுக்கு சுயமாக தொழில் (SOUND SERVICE) செய்ய 25 ஆயிரம் வழங்கப்பட்டது, ஆகமொத்தம் 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வாய்பேசாதோர், காது கேளாதோர் பள்ளிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் ரூபாய் 50,000 நிதியுதவி வழங்கினார். தன்னுடைய பிறந்தநாளையொட்டி அப்பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.