புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை ஆகிய துறைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை, மின்சாரம், கல்வி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமாருக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா, மீன்வளத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சந்திரபிரியங்காவுக்கு போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேளாண்மை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.