ஜெகன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நந்தியால் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 3-ம் தேதி நடந்த பிரசாரத்தில் ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பொய்யான தேர்தல் வாக்குறுதி தந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பொது இடத்தில் வைத்து சுட்டு கொன்றால் தவறு இல்லை என்றார். வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஜெகன் மோகன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக ஜெகன் மீது வழக்குப்பதிய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.