அயோத்தி நில வழக்கில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதியளித்தது. மேலும், ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசு, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இதேநாளில், பிரதமர் மோடி அயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில், இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய தினமான இன்று, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்திக்குச் சென்று இராமர் கோவில் கட்டுமானப் பணிகளை ஆய்வுசெய்தார். அப்போது அவர், இராமர் கோவில் மாதிரிக்கு வழிபாடு நடத்தினார்.
2023ஆம் ஆண்டு இறுதியில் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் எனவும், கோயிலின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் 2025ஆம் ஆண்டு நிறைவுபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.