Skip to main content

உத்தரகாண்ட் மாநிலத்தில் உலகத்தரம் வாய்ந்த மாட்டு யாத்திரை மையம்!

Published on 25/08/2017 | Edited on 25/08/2017
உத்தரகாண்ட் மாநிலத்தில் உலகத்தரம் வாய்ந்த மாட்டு யாத்திரை மையம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மாட்டு யாத்திரை மையத்தை அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கர்தாப்பூர் கிராம், பசு பாதுகாப்புக்கான பாரம்பரியமான கிராமம் என்றும், அங்கு மாட்டு யாத்திரை மையம் உருவாக்க அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வழங்கிய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த மாட்டு யாத்திரை மையத்தில் மாடுகளுக்கான கூடுதல் பாதுகாப்பு, மேய்ச்சல் நிலங்கள், பண்ணைப்பகுதிகள் மற்றும் பசு பாதுகாப்பிற்கான கூடுதல் நிதி உள்ளிட்டவைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்தாப்பூர் கிராமம் இந்து மக்கள் அதிகமாக வாழும் பகுதி என்றும், இங்கு கடந்த 1918-ஆம் ஆண்டுகளில் பசு மாடுகளை ஆங்கிலேயர்கள் கொன்றதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்ததாகவும், இதில் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், 130 பேர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த பாரம்பரியமிக்க கிராமத்தில் பசுக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் வகையில், இந்த மாட்டு யாத்திரை மையம் அமைக்கப்படவுள்ளது. முதல்வர் ராவத் தரப்பில் மாட்டு யாத்திரை மையம் குறித்த திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ். உடனான கூட்டம் மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்மாநில முதல்வர் ராவத் உலகத்தரம் வாய்ந்த பசு பாதுகாப்பிற்காக, சர்ச்சைக்குரிய கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் உடன் இணைந்து செயல்பட முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்