தமிழகத்தில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று (18/07/2022) தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் உள்ள படிவங்கள் மற்றும் தகவல்கள் தமிழிலும் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பணிப்புரியும் போது, அவர்களுக்கு தமிழ்மொழி பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துளளார்.
இதனிடையே, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.