Published on 30/12/2020 | Edited on 30/12/2020

இங்கிலாந்து நாட்டில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்தநாட்டில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்தில் புதியவகை கரோனா பரவலைத் தொடர்ந்து, அங்கிருந்து விமானங்கள் வருவதற்கு சவுதி அரேபியா, கனடா உள்ளிட்ட பல உலக நாடுகள் தடை விதித்துள்ளன.
அதேபோல் இந்தியாவும், இங்கிலாந்திலிருந்து விமானங்கள் வர, நாளை (31.12.2020) வரை தடை விதித்திருந்தது. தற்போது இந்த தடையை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 20 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.