Published on 24/02/2019 | Edited on 24/02/2019
சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதி என பெயரிடப்பட்டுள்ள திட்டத்தை தொடங்கி வைத்தார். இரண்டு ஹெக்டருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
இந்த நிதி மூன்று தவணைகளாக தலா ரூ 2000 என விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.