Skip to main content

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு... வாங்க முனையும் இரண்டு இந்திய நிறுவனங்கள்...!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, அமெரிக்க நிறுவனமான உபர் ஈட்ஸை வாங்குவதற்கு திட்டமிட்டு இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

 

uber

 

அமெரிக்க ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபர், இந்தியா மட்டுமில்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் உணவு டெலிவரி சேவையை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 

இந்தியாவில் உபர் ஈட்ஸ் ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,50,000 உணவு ஆர்டர்களை டெலிரியை செய்கிறது. ஸ்விகி மற்றும் சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 5 முதல் 10 லட்சம் வரை உணவு ஆர்டர்களை டெலிவரி செய்கின்றன. மேலும் உபர் ஈட்ஸ் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 15 முதல் 20 மில்லியன் டாலர் வரை இழப்பை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் இந்தியாவில் ஸ்விகி மற்றும் சொமாட்டோ நிறுவனங்களுடன் போட்டிப் போட முடியாமல் உபர் ஈட்ஸ் இந்தியா, சரிவை சந்தித்துவருகிறது.
 

இதனால் அந்நிறுவனம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், உபர் ஈட்ஸை எந்த விலைக்கு விற்பது எனும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொமாட்டாவும் உபர் ஈட்ஸை வாங்க முன்வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்