தெலங்கானாவில் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தனித்துப் போட்டியிடப்போவதாக ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானா மாநிலம், வாராங்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, "அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸுக்கும், காங்கிரஸுக்கும் நேரடி மோதல். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். சரியான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி செய்வதையே பா.ஜ.க. விரும்புகிறது" என்று குற்றம் சாட்டினார்.