Skip to main content

ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன #BlockNarendraModi - பாஜக ஐடி பிரிவு விளக்கம்

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன #BlockNarendraModi - பாஜக ஐடி பிரிவு விளக்கம்

பிரதமரால் ட்விட்டரில் பின்தொடரப்படுபவர்கள் என்பதால் நற்சான்றிதழ்கள் கொடுத்துவிடமுடியாது என பாஜகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் அமித் மலவியா தெரிவித்துள்ளார்.



கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை வரவேற்பதாக நிகில் தடிச் என்ற நபர் ட்விட்டரில் தெரிவித்திருந்தது அனைவரிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நபரை மோடி ட்விட்டரில் பின்தொடர்கிறார் என்ற தகவலும் அதைத் தொடர்ந்து பரவியது.

இதையடுத்து பெரும்பாலான ட்விட்டர்வாசிகள், இவ்வளவு கேவலமான ஆட்களை பின்தொடரும் மோடியை ட்விட்டரில் ப்ளாக் செய்துவிட்டதாக பதிவிடத் தொடங்கினர். மேலும், #BlockNarendraModi என்ற ஹேஸ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதலளித்த அமித் மலவியா, ‘இது மோசமான செயல்பாடு. பிரதமர் மோடி மட்டுமே பொதுமக்களோடு சமூக வலைதளங்களில் இணைத்திருப்பவர். அவர் சாதாரண மக்களை பின்தொடர்ந்து சமூகம் சார்ந்த பல விஷயங்களை விவாதித்து வருபவர். மோடி மாதிரியான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக பேசும் தலைவரைக் காணமுடியாது. அவர் யாரையும் ப்ளாக் கூட செய்தது கிடையாது.

மோடியால் பின்தொடரப்படும் நபரின் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு நம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது. அவர் ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலைக் கூடத்தான் ட்விட்டரில் பின்தொடர்கிறார்’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன் 

சார்ந்த செய்திகள்