குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணம்
விதானசவுதாவில் நேற்று கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் தென் இந்தியாவில் உள்ள 21 புனித ஸ்தலங்கள் மற்றும் சரித்திர புகழ்மிக்க இடங்களை குறைந்த கட்டணத்தில் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கும் புனித பயண திட்ட தொடக்கவிழா நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு பேசுகையில், கர்நாடக சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் புனித பயணம் மேற்கொள்ளும் வசதியை கர்நாடக சுற்றுலாத்துறை மற்றும் கர்நாடக போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தென் இந்தியாவில் புனித பயணம் மேற்கொள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 24 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மூலமாகவும் 25 சதவீத கட்டண சலுகைகள் அளிக்கப்படுகிறது. இந்த புனித சுற்றுப்பயணம் என்பது ஆண்டு முழுவதும் செய்துகொடுக்கப்படும் என்றார்.