தகவல் தொடர்புக்கான செயலினா வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு செயலியான இதனை உலக அளவில் அதிகம் உபயோகிப்பது யார் என்பது குறித்த ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
eMarketer என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வின் முடிவுகளின்படி உலகிலேயே அதிகமானோர் வாட்ஸ்அப் உபயோகிக்கும் 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி உலகிலேயே அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நாடாக இந்தியா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 34 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனாளர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல்.
1. இந்தியா - 340 மில்லியன் (34 கோடி)
2. பிரேசில் - 99 மில்லியன் (9.9 கோடி)
3. அமெரிக்கா - 68.1 மில்லியன் (6.8 கோடி)
4. இந்தோனேசியா - 59.9 மில்லியன் (5.9 கோடி)
5. மெக்சிகோ - 57.2 மில்லியன் (5.7 கோடி)
6. ரஷ்யா - 54.1 மில்லியன் (5.4 கோடி)
7. ஜெர்மனி - 43.9 மில்லியன் (4.3 கோடி)
8. இத்தாலி - 32.9 மில்லியன் (3.2 கோடி)
9. ஸ்பெயின் - 30.5 மில்லியன் (3 கோடி)
10. இங்கிலாந்து - 27.6 மில்லியன் (2.7 கோடி)