Published on 26/04/2022 | Edited on 26/04/2022

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்வெட்டு நிலவுவது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்ஷி அம்மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 40 டிகிரி செல்ஸியஸுக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மின்வெட்டாலும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றன. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டோனியின் மனைவி சாக்ஷி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஏன் மின்வெட்டு நிலவுகிறது? பல ஆண்டுகளாக வரிச் செலுத்துபவராக இந்த கேள்வியை அரசிடம் கேட்கிறேன். மின்சாரத்தைச் சேமிக்க தங்களது கடமையை செய்து வருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.