Published on 06/10/2018 | Edited on 06/10/2018
திருப்பதி கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் பக்தர்கள் ரூ.87.84 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு செம்படம்பர் மாதத்தை விட ரூ.11.25 கோடி அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த செப்டம்பரில் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் 23.38 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். லட்டு 93.87 லட்சம் விற்பனை ஆகியுள்ளது. 9.82 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தங்கும் விடுதிகள் வாடகை மூலம் ரூ.5.93 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள் தெரிவித்துள்ளது.