Skip to main content

நொடியில் நடந்த திக் திக் சம்பவம்- சென்னையில் பரபரப்பு

Published on 20/03/2025 | Edited on 20/03/2025
The Tik Tik incident that happened in an instant - a sensation in Chennai

நேற்று சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வந்த ரயில், தண்டவாளத்தில் நின்ற பெண்மணி மீது மோதி தூக்கி வீசப்படும் காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிண்டி-சைதாப்பேட்டை இடையே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சைதாபேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது தற்கொலை எண்ணத்தில் அவர் ரயில் முன் நின்றாரா? என்பது தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பெண் யார்: எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தற்கொலை எண்ணம் முற்றிலும் தவறானது'- தற்கொலை எண்ணமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட உடனடியாக தமிழக சுகாதார சேவை உதவி மையம் 104-ஐ அழைக்கவும்.

சார்ந்த செய்திகள்