Published on 04/03/2019 | Edited on 04/03/2019
![gfhfhfh](http://image.nakkheeran.in/cdn/farfuture/MDf42xq4cB4MgaNsOY3HXvltPe620k0tAKOkA2qU9Y4/1551715802/sites/default/files/inline-images/dk-std.jpg)
முன்னாள் மத்திய அமைச்சரான தனஞ்செய் குமார் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உடல் நலக்குறைவால் காலமானார். 67 வயதான இவர் வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக அங்கம் வகித்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் கடந்த 4 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2003 வரை மந்திரி சபையில் பல பொறுப்புகளை இவர் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.