உக்ரைனில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், போர் காரணமாக அங்கிருந்து தாயகம் திரும்பி வரும் நிலையில், அவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவில் பூர்த்திச் செய்யலாம் என்று தேசிய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.
முதலாமாண்டு தொடங்கி, இறுதி ஆண்டு வரைப் படித்து வரும் மாணவர்கள், போர் காரணமாக தங்கள் படிப்பைப் பாதியில் விட்டு தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பயிற்சி மருத்துவத்தை முடிக்காதவர்கள் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்காக தேசிய கல்வி வாரியம் நடத்தும் தேர்வை எழுதி, தேர்ச்சிப் பெற்று எஞ்சிய பயிற்சியை முடிக்கலாம் என்று தேசிய மருத்துவக் கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதே முறையில் மாநில மருத்துவ கவுன்சில்கள் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படித்துத் திரும்புவோருக்கான உதவித்தொகை, இந்த மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று தேசிய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.