நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநாயகர் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மஜத சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மூத்த உறுப்பினர் என்பவர் வயதில் மூத்தவர் அல்ல. எத்தனை முறை உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பதில்தான் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில்சிபல், போபையா பதவிப்பிரமாணம் செய்துவைப்பதில் பிரச்சனை இல்லை. வாக்கெடுப்பு நடத்துவதில்தான் பிரச்சனை என்றார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநாயகரே நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.