Skip to main content

வகுப்பில் பேசியதற்காக எல்.கே.ஜி குழந்தைகளுக்கு தண்டனை; ஆசிரியைக்கு எதிர்ப்பு

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

 

del

 

டெல்லியின் குர்கிராமில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் படிக்கும் எல்.கே.ஜி குழந்தைகள் வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்ததால் கோபமடைந்த ஆசிரியை அவர்கள் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி உட்காரவைத்து சம்பவம் மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் பேசியுள்ளனர். ஆசிரியை கண்டித்ததை தொடர்ந்தும் அவர்கள் பேசியதால், கோபமடைந்தவர்  அவர்கள் வாயில் செல்லோ டேப்பை ஒட்டியதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்பொழுது அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிறுகுழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தண்டனை கொடுத்த அந்த ஆசிரியைக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்