மகாராஷ்டிரா முதல்வர் அலுலகத்தில், தேநீர் விநியோகத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் தலைமை செயலகம் மந்திராலயாவின் தேநீர் செலவு பற்றிய கேள்விக்கு மூன்று ஆண்டுகளுக்கு 3 கொடியே 40 லட்சம் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்தது பதில். 2015-2016 ல் ரூபாய் 58 லட்சமாக இருந்த தேநீர் செலவு, 2017-2018ல் மட்டும் 3 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது எனில், தினமும் சராசரியாக 18,500 கோப்பை தேநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதா? அது சாத்தியமா? என பல கேள்விகள் எழுப்பியுள்ளார் சஞ்சய். மேலும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் லெமன் டீ, க்ரீன் டீ யையும் தாண்டி ஒருவேளை கோல்டன் டீ குடிக்கிறாரா எனவும் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மக்கள் இங்கு வறுமையில் வாடியிருக்க தேநீர் செலவுக்காக மட்டும் 3 கோடியை கணக்கு காண்பிப்பது எந்த வகையில் நியாயமானது, ஒருவேளை தலைமை செயலகத்திலுள்ள எலிகள் தேநீரை அருந்தி விட்டதா? எனவும் விமர்ச்சித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா அரசு இதற்கு சரியான விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் ஊறியுள்ளார்.