புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் தெலுங்கானாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தினை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், "ரெம்டெசிவிர் தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வந்தது. ரெம்டெசிவிர் மருந்து தெலுங்கானாவில் தயாரிக்கப்படுகிறது. தெலுங்கானா சுகாதாரத்துறை மற்றும் முதலமைச்சர் ஆகியோர் ஒத்துழைப்பின்படி 1,000 மருந்துகள் தெலுங்கானாவில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ் வருடப்பிறப்பு என்றாலும் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திடீரென கரோனா உச்சத்தை தொடுகிறது என்பதால் தடுப்பூசியை மக்கள் செலுத்திகொள்ள வேண்டும்" என்றார்.