Published on 10/06/2020 | Edited on 10/06/2020

இன்று காவிரி ஆணையத்தின் கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஜெயின் தன் அலுவலகத்தில் இருந்து ஆலோசனையில் கலந்துகொண்டார். அதேபோல் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய மாநில தலைநகரங்களில் இருந்து ஆலோசனையில் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆலோசனையில், மேகதாது அணை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு விடுத்திருந்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து, இந்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்த நிலையில், மேகதாது அணை குறித்த கர்நாடகாவின் கோரிக்கையை பற்றி ஆணையம் பரிசீலிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.