உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாக பரவிவருகிறது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்துவந்த மஹாராஷ்ட்ராவில், தற்போது கரோனா பாதிப்பு சற்று குறைந்துவருகிறது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் கூட கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு என்பது தமிழகத்தைவிட குறைந்து காணப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் நேற்று (18.05.2021) மட்டும் 33,059 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக தொற்று பதிவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அடுத்தடுத்த இடத்தில் முறையே கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா உள்ளன. குறிப்பாக இந்தியாவில் உள்ள பெரிய 10 மாநிலங்களில் 74 சதவீத தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.