Skip to main content

தூதரகம் தொடர்பாக இந்திய அரசுக்கு செய்தி அனுப்பிய தலிபான்கள்?

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

indian embassy kabul

 

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைத் தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கன் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்வேறு நாடுகளும் ஆப்கனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

 

இந்தியாவும் அண்மையில் தனது தூதரக அதிகாரிகளை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துவந்தது. இந்தநிலையில், காபூலில் உள்ள இந்திய தூதரகத்தைக் காலி செய்ய வேண்டாம் என தலிபான்கள் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கத்தார் நாட்டிலுள்ள தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவரான அப்பாஸ் ஸ்டானிக்ஜாயின் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தகவலில், இந்தியா தனது தூதரகத்தைக் காலி செய்ய வேண்டாம் எனவும், இந்திய தூதருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

 

மேலும், வேறு தீவிரவாத அமைப்புகளால் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என இந்திய அரசு அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அப்பாஸ் ஸ்டானிக்ஜாயின் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலில் கூறப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே கந்தஹார் மற்றும் ஹெராட்டில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகங்களின் பூட்டினை உடைத்து தலிபான்கள் சோதனை நடத்தியதாகவும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தூதரக அதிகாரிகளின் வாகனங்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்