உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களும் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் தற்போதைக்குத் திறக்கப்படாது என்று உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.