Published on 27/08/2020 | Edited on 27/08/2020

மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய வழக்கங்களில் ஒன்றான மொஹரம் ஊர்வலம் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது. ஆனால், ஊரடங்கு காரணமாக இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மொஹரம் பண்டிகைக்கு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, "ஒரு குறிப்பிட மத ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி அளித்தால் குழப்பம் ஏற்படும்" எனக்கூறி அனுமதி மறுத்தார்.