Published on 09/07/2018 | Edited on 09/07/2018

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட உள்ளது. இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
வரும் 23ம் தேதிக்குள் நேரலைக்கான வழிமுறைகளை உருவாக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்கவுன்சில் வழக்கறிஞர்களுக்கும் ஆலோசனை வழங்க அறிவுறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.