உத்திரபிரதேசத்தின் அலிகார் பகுதியில் ஏராளனமான மாடுகள் உரிமையாளர்கள் இன்றி சாலைகளில் திரிந்து வந்துள்ளன. இந்த மாடுகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாகவும், அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்குள்ள விவசாயிகள் பலமுறை புகார் செய்துள்ளனர். ஆனால் இது சார்பாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காததால் கோபமடைந்த விவசாயிகள், அங்கு திரிந்து வந்த சுமார் 700 மாடுகளை அங்குள்ள அரசு பள்ளியிலும், கால்நடை மருத்துவமனையிலும் உள்ளே வைத்து பூட்டினர். அதன் பிறகு அங்கு வந்த அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு அந்த மாடுகள் அரசாங்க காப்பகத்திற்கு அழைத்து செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் அந்த பகுதியிலேயே பசு காப்பகம் கட்டும் வேலை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிந்தவுடன், அது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறினர்.