Published on 20/05/2020 | Edited on 21/05/2020

10- ஆம் வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி, பாடத்திட்டங்களில் பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக்கூடாது. ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்; உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு வசதியாக பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.