இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் முன்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. காற்று பலமாக வீசியதால் சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது.

ஸ்ரீசாந்த் வீட்டில் தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். திருக்காக்கரா மற்றும் காந்திநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், ஸ்ரீசாந்த் வீட்டில் இருந்து தீயை அணைத்தனர். என்றாலும் வீட்டின் முன்பக்க அறை எரிந்து நாசமானது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதற்கிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.