Published on 01/03/2019 | Edited on 01/03/2019
ஜியோ சாவன், அமேசான் மியூசிக், ஆப்பிள் மியூசிக் ஆப்களுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரும் மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை இந்தியாவில் அறுமுகமாகியிருக்கிறது.

இந்தியாவில் ஸ்பாட்டிஃபை கட்டணம், மாதம் 119 ரூபாய் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் குறுகிய காலத் திட்டமாக நாள் ஒன்றுக்கு 13 ரூபாய், வாரக் கட்டணம்- 39 ரூபாய், மூன்று மாதக் கட்டணம்- 389 ரூபாய், அரையாண்டுக் கட்டணம்- 719 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்பாட்டிஃபை-க்குப் போட்டியாக ஹங்காமா, கானா, ஜியோ சாவன், விங்க் போன்ற மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.