
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (02/10/2022) காலை பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். அதேபோல், குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எம்.பி. உள்ளிட்டோரும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதைச் செய்தனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மரியாதைச் செலுத்தினார்.