2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகின் பல நாடுகளில் இரண்டாம் அலையில், உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில், இந்தியாவில் இதுவரை 18.21 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் என்பது 81.7 சதவீதத்திலிருந்து 85.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.199 மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களாக கரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாகவும், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.