நீட் தேர்வுமுறை கண்டித்தும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க கோரியும் மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வுமுறை கண்டித்தும், நேற்று நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க கோரியும் மாணவர்களின் மருத்துவ கல்வியில் அரசியல் செய்யும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் முருகன் தலைவர் பூபாலன் தலைமையில் நடந்தது. பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான முழக்கங்கள் எழுப்பி தங்களது எதிரப்பை வெளிப்படுத்தினர்.
- சுந்தரபாண்டியன்