சோலார் பேனல் ஊழல் வழக்கில் உம்மன் சாண்டி விடுவிப்பு
கேரளாவில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை விற்பனை செய்ய அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி தன்னிடம் இருந்து முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட ஆறுபேர் 1.35 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் குருவில்லா குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக நடைபெற்ற பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் உம்மன் சாண்டி உள்ளிட்டவர்கள் குருவில்லாவுக்கு 12 சதவீத வட்டி மற்றும் வழக்கு செலவினங்களுடன் சேர்த்து 1.60 கோடி ரூபாயை 6 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உம்மன் சாண்டி தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவித்து கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.