மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வன் சிவராஜ் சிங் சவுகான், “பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் வழிபடத் தொடங்கிவிட்டதாக” கூறியுள்ளார்.
அண்மையில் ஜம்மு காஷ்மீரில் இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது தற்போதையை மத்திய அரசு. இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீர் ஒரு தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு பலரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தாலும், சிலர் இந்த நடவடிக்கைகளை வரலாற்று சிறப்புமிக்கது என்று மெச்சுகிறார்கள்.
இந்நிலையில் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை இதுவரை தான் தலைவர்களாக மட்டுமே கருதியதாகவும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின் அவர்களை வழிபட தொடங்கிவிட்டேன்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இதன் மூலம் ஜவஹர்லால் நேரு செய்த வரலாற்று பிழை, மோடி மற்றும் அமித்ஷாவால் சரி செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
நேரு குறித்த அவருடைய இந்த பேச்சுக்கு காங்கிரஸை சேர்ந்த ம.பி. முதல்வர் கமல்நாத் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். புதிய இந்தியாவை உருவாக்கியவர் நேரு என்றும் குறிப்பிட்டுள்ளார்.