கேரளா மாநிலம் கொச்சியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் விசைபடகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் உயிழந்தனர்.
எா்ணாகுளத்தை சோ்ந்த சிவன் என்பவருக்கு சொந்தமான ஓசியன்ட் விசைபடகில் குமரி மாவட்டம் மற்றும் கேரளா, மேற்கு வங்கத்தை சோ்ந்த 15 மீனவா்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கொச்சி முனப்பம் பகுதியில் இருந்து 35 நாட்டிங்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். விசை படகை ஏசுபாலன் என்பவா் ஒட்டினார். இதில் 6 பேர் குமரி மாவட்டம் குளச்சலை சோ்ந்த மீனவா்கள்.
இந்த மீனவா்கள் மீன் பிடித்து கொண்டிருந்த பகுதி கப்பல்கள் செல்கிற சானல் பகுதி என்பதால் அந்த அதிகாலை நேரத்தில் 10க்கு மேறப்பட்ட கப்பல்கள் ஓன்றன் பின் ஓன்றாக வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது அதில் ஓரு கப்பல் திசை மாறி மீன் பிடித்து கொண்டிருந்த அந்த விசை படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றன.
இதில் அந்த விசைபடகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவா்கள் மனக்கொடி, யாக்கோபு, யூகநாதன் ஆகிய மூன்று போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்கள் குளச்சலை சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மூன்று பேரை படுகாயத்துடன் அங்கு இன்னொரு விசைபடகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவா்கள் கரைக்கு மீட்டு வந்தனர். மற்றவா்கள் அனைவரும் படகோடு கடலில் மூழ்கியதாக கூறியுள்ளனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு சென்ற இந்திய கப்பல் படையினர் இடித்த அந்த கப்பலை தேடிவருகின்றனர். மேலும் மும்பையில் உள்ள மரைன் இன்ஸ்டியுசன் உதவியுடன் அந்த கப்பல் எந்த திசையை நோக்கி சென்றுள்ளது என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் குமரி மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலி நாட்டை சோ்ந்த கப்பல் ஒன்று கொச்சியில் மீன்பிடித்து கொண்டிருந்த படகு மீது மோதியதில் குமரி மாவட்டத்தை சோ்ந்த இரண்டு மீனவா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடதக்கது.
Published on 07/08/2018 | Edited on 27/08/2018