28-ஆம் தேதி செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதன்பின் பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தது. அதனைத்தொடர்ந்து பெண்கள் யாரும் கோவிலுக்குள் சென்றுவிடக்கூடாது என்று சபரிமலைக்கு செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதையும் மீறி சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியில் முடிந்தது. அதில் ஒருவராக கேரளாவை சேர்ந்த ரெஹானா ஃபாத்திமா கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயற்சித்தார். ஆனால், அதுவும் தோல்வியில்தான் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை கேரளா இஸ்லாம் ஜமாத் ”இவரின் செயல்பாடு பல இலட்சம் இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக இருக்கிறது” அதனால் இஸ்லாம் மதத்திலிருந்து நீக்குவதாக அவ்வமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார். அதேபோல் எர்ணாகுளம் மத்திய இஸ்லாம் ஜமாத் அமைப்பில் இருந்தும் ரெஹானா ஃபாத்திமாவையும் அவரின் குடும்பத்தையும் நீக்க அவ்வமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இவர் மேலும் ஏற்கனவே ’கிஸ் ஆஃப் லவ்’ எனும் போராட்டத்தையும் நடத்தியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.