
பொதுக்கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரியை கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறைவது போல் சைகை காட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் சித்தராமையா கலந்து பேசத் தொங்கினார். அப்போது கூட்டத்தில் இருந்த பா.ஜ.க மகளிர் அணியினர் கருப்புக்க் கொடி காட்டி முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதில் கோபமான முதல்வர் சித்தராமையா, பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் நாராயன் பரமணியை மேடையில் அழைத்துள்ளார். அப்போது முதல்வர், ‘நீங்க யாரா இருந்தாலும் இங்க வா? என்ன பண்ணிட்டு இருந்தீங்க’ என்று கேட்டுவிட்டு அந்த அதிகாரியை அறையை கையை உயர்த்தினார். ஆனால், சிறிது நேரத்திலே அப்படியே நிறுத்திவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநில எதிர்க்கட்சிகள், முதல்வர் சித்தராமையாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.