Published on 06/01/2022 | Edited on 06/01/2022
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருவதால், திட்டமிட்டபடி ஐந்து மாநில தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர், ஐந்து மாநிலங்களில் நிலவும் கரோனா பரவல் நிலை குறித்து விளக்கமளித்து வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பாலும் கலந்துகொண்டுள்ளார். இதற்கிடையே பேரணிகளையும், பெருங்கூட்டங்களையும் நிறுத்துமாறு வி.கே. பால் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.