Skip to main content

40 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; காப்பக வளாகத்திலேயே உடல் அடக்கம்!! மனதை உலுக்கும் பாலியல் அத்துமீறல்

Published on 24/07/2018 | Edited on 24/07/2018

 

child rape

 

 

 

பீஹாரில் காப்பகம் ஒன்றில் கிட்டத்தட்ட 40 சிறுமிகள் காப்பக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பாலியல் கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் கொடுமை செய்யப்பட்டு ஒரு சிறுமி காப்பக வளாக இடத்திலேயே புதைக்கப்பட்டுள்ளார் என்ற புகாரை அடுத்து போலீசார் மேற்பார்வையில் அங்கு புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

 

 

 

 

பீஹாரில் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சுமார் 7 வயதுமுதல் 17 வயதுடைய 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காப்பக ஊழியர்கள், அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 10-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவரை காணவில்லை என தெரிந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஊழியரால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட அந்த சிறுமி காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஜெ.சி.பி இயந்திரத்துடன் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மீட்கப்ட்ட 21 சிறுமிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 16  சிறுமிகள் பாலியல் கொடுமை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

 

அந்த காப்பகம் மட்டுமின்றி பீஹாரில் உள்ள மோட்டிஹாரி, சிவான்,ஹாஜிப்பூர் போன்ற இடங்களில் உள்ள காப்பக விடுதிகளில் இதுபோன்ற பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த  பூதாகற விஷயத்தை பற்றி பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாய்திறக்காதது அங்கு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சார்ந்த செய்திகள்