Skip to main content

எவரெஸ்ட் சிகரத்தை தாக்கிய ஃபானி புயல் !

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

ஃபானி புயல் நேற்று ஒடிசாவை புரட்டிப்போட்டது. இந்த புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரம் வரை சென்றிருக்கிறது. அங்குள்ள 20 முகாம்கள் காற்றில் பறந்திருக்கின்றனர். வங்கக்கடலில் உருவான ஃபானி புயலானது சென்னை வழியே கரையை கடந்து தமிழகத்திற்கு நல்ல மழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒடிசா மாநிலத்தில் புயல் கரையை கடந்து அதிக மழையும் , சற்று அழிவையும் ஃபானி புயல் அளித்துக்கொண்டிருக்கிறது. இந்த புயலால் ஒடிசா மாநிலத்தில் மரங்களும் , மின் கம்பங்களும் புயலின் தாக்குதலால் மிகுந்த சேதம் அடைந்துள்ளனர்.

 

 

FANI CYCLONE

 

 

 

இதனால் தொலைத்தொடர்பு மற்றும் மின் வசதிகள் உள்ளிட்டவை புவனேஸ்வர் மற்றும் பூரி மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் அங்கு 6400 மீட்டர் உயரத்தில் இரண்டாவது மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஃபானி புயலால் 20 முகாம்கள் காற்றில் பறந்துள்ளனர். இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எவரெஸ்ட் ட்ரெக்கிங் நிறுவனங்களுக்கு நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரெக்கிங் செல்வோரின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் அதிக சேதத்தை புயல் ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் ஒடிசாவில் உடனடியாக தொலைத்தொடர்பு வசதிகள் உடனடியாக சீர் செய்யப்படும் என ஏர்டெல் , வோடாபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்