Skip to main content

வேலை இழக்கும் 13.5 கோடி இந்தியர்கள்... அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்...

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

unemployment rate in india after corona

 

கரோனா முடக்கத்தால் இந்தியாவில் 12 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள் எனவும், 13.5 கோடி பேர் வேலை இழப்பார்கள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
 


இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகக் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தொழில்துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. மக்களும் கடுமையான நிதி சிக்கலைச் சந்தித்து வருகிறார்கள். இந்தச் சூழலில், இந்தியாவில் கரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் இந்த ஊரடங்கு காரணமாக 12 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள் எனவும், 13.5 கோடி பேர் வேலை இழப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி நபர் வருவாய் கணிசமான அளவு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி விகிதம் சரியும் என்பதால் நலிவுற்ற பிரிவினருக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தரும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்