மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தீபாவளி பண்டிகையை கொண்டாட தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின் ஏற்பட்ட குடும்ப தகராறில் அந்த சிறுமி விட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது மகளை எங்கு தேடியும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரி கடற்கரையில் மிகவும் பலவீனமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், காஜா மொஹிதீன் என்ற நபர் ஓட்டிச் சென்ற ஆட்டோவில் சிறுமி நுழைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், காஜா மொஹிதீன் என்ற ஆட்டோ டிரைவர், சிறுமியை ஒரு விருந்தினர் மாளிகைக்கு சென்று பின்னர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற பின், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், சிறுமியை ஆரோவில் கடற்கரையில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன் பின்னர், சிறுமி தனது நண்பரை சந்திக்க விரும்பி சென்னைக்கு சென்று கொண்டிருந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். ஆனால், அந்த குழு சிறுமியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் அந்த சிறுமியை அந்த அறையில் சிறைபிடித்து, அதன் பின்னர் ஒரு வண்டியை முண்டியை முன்பதிவு செய்து புதுச்சேரிக்கு சிறுமியை திருப்பி அனுப்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப கலைஞர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.