Published on 19/12/2021 | Edited on 19/12/2021
கேரளா மாநிலம், ஆலப்புழாவில் பா.ஜ.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் கொலை செய்யப்பட்டார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களே இந்த கொலையைச் செய்ததாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் சாடினர். இந்த நிலையில், பா.ஜ.க. நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன், ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
12 மணி நேரத்தில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவங்களால் ஆலப்புழாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பழிக்கு பழியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை செய்யப்பட்டாரா என காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.