Skip to main content

சூரிய கிரகணம் - அரசு விடுமுறை அறிவித்த மாநில அரசு!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019


வரும் 26ம் தேதி இந்தியாவில் வளைய சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. அதாவது, சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைத்தால் அது சூரிய கிரகணம் என்று கூறப்படும். அதுவே சூரியனின் மையப்பகுதியை மட்டும் சந்திரன் மறைத்தால் அது வளைய சூரிய கிரகணம் என்று சொல்லப்படும். இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 



இந்நிலையில், சூரிய கிரணகத்தை முன்னிட்டு ஒடிசா மாநில அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. அதே போன்று அரசு அலுலர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் விடுமுறை அறிவிக்காத நிலையில் ஒடிசாவில் விடுமுறை விடப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்