ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. சிலநாட்கள் முன்பு மாணவர்கள் சிலர் கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டிருப்பது போன்று வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. படிக்க பள்ளிக்கு சென்ற குழந்தைகளை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்தது தவறு என ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தூய்மை குறித்த செயல்முறை கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கழிவறை சுத்தம் செய்யும் பணியும் வழங்கப்பட்டது. இது ஒன்றும் தவறான விஷயம் அல்ல என்று கூறியுள்ளார். ஆனால் செயல்முறை விளக்கம் அரசு பள்ளியில் மட்டும்தான் நடக்குமா? தனியார் பள்ளிகளில் நடக்காதா? கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதே தவறு, இதில் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்க பார்க்கிறார் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.