கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நடிகையான சம்யுக்தா ஹாக்டே. இவர் தமிழில் வெளியான வாட்ச்மேன், பப்பி, கோமாளி போன்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த கோமாளி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் கரோனா வைரஸ் தொற்றின் காரணத்தால் லாக்டவுனில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதால், உடற்பயிற்சி கூடம், பார்க் (பூங்கா) போன்றவையும் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் பொங்களூரில் பூங்கா ஒன்றில் மேலாடையுடன், ரிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த கர்நாடக போலீசார் சமரச முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நடிகை சம்யுத்தாவையும், அவர் தோழிகளையும் ஒரு கும்பல் தாக்கியது, ஒரு சிலர் பூங்காவை பூட்டு போட்டனர். இதையெல்லாம் தன் பேஸ்புக் லைவ் வீடியோவில் வெளியிட்ட நிலையில் நடிகை சம்யுக்தா, நான் செய்தது வெறும் உடற்பயிற்சிதான் என்று ஆவேசத்துடன் மீண்டும் தன் டி.சர்ட்டை கழட்டிவிட்டு மேலாடையுடன் இதில் என்ன ஆபாசம் என்று கேள்வி கேட்டபடி தன் பேஸ்புக் லைவில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ்சார் விரைந்து அவரை டி.சர்ட்டை அணியச்சொல்லி கும்பலிடம் இருந்து காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பினார்கள்.